search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் எம்.எல்.ஏ."

    • அதிகனரக கனிமவள வாகனங்கள் புளியரை வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • புளியரை வழியாக திருவனந்தபுரம் மருத்துவமனை செல்லும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    கடையம்:

    அம்பை, தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கடந்த சில நாட்களாக தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகனரக கனிமவள வாகனங்கள் செல்வதால் அதிகாலை 3 மணி முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் புளியரை வழியாக திருவனந்தபுரம் மருத்துவமனை மற்றும் விமான நிலையத்துக்கு செல்லும் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

    ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது. அவ்வழியாக பஸ்சில் செல்லும் பொதுமக்களும் பெரும் துயரத்திற்கு ஆளாகி யுள்ளனர்.

    எனவே முதல்- அமைச்சர் உடனடியாக தலையிட்டு அதிகனரக வாகனங்கள் செல்வதை தடுத்து போக்குவரத்தை சீர் செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாகர்கோவில் பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜை சந்தித்து பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன் அக்கட்சியில் இருந்து விலகி குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜை சந்தித்து பாரதிய ஜனதாவில் இணைந்தார். அ.தி.மு.க. நிர்வாகிகள் எஸ்.ஏ. தங்கராஜ் மற்றும் சங்கர் உள்ளிட்டோரும் பாரதிய ஜனதாவில் சேர்ந்தனர்.

    நாகர்கோவில் பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பார்வையாளர் சி.எஸ். சுபாஷ் முன்னிலை வைத்தார் இதில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மணி, தணிக்கை குமார், தாமரைத் துறை அரசன் ஆர்.எஸ். பாரத் செல்வ சுப்பிரமணியன், ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டு முன்பு குவிந்தனர்.

    திருப்பூர் :

    கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ். பி .,வேலுமணி வீடு உள்பட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்டம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அவரது வீட்டு முன்பு குவிந்தனர்.அப்போது போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. ,வேலுமணியின் வீட்டில் நடைபெறும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன் தலைமையில் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கோவை சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து கோவையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.இந்த தகவல் கிடைத்ததும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ,திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்து அடைத்து வைக்கப்பட்டு இருந்த மண்டபத்திற்கு நேரடியாக சென்று நிர்வாகிகளை சந்தித்தார். 

    • பணம் கேட்டு கடத்தியதாகவும், ரூ.1.50 கோடி பறித்து கொண்ட தாகவும் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார்.
    • கைது செய்யப்பட்ட தர்மலிங்கமும், கர்ணனும் அண்ணன் தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரன்(46). புஞ்சைபுளியம்பட்டி அருகே புஜங்கனூரியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    கடந்த மாதம் 24-ந் தேதி 6 பேர் கொண்ட கும்பல் தன்னை பணம் கேட்டு கடத்தியதாகவும், ரூ.1.50 கோடி பறித்து கொண்ட தாகவும் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம் பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி மிலிட்டரி சரவணன் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

    ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு உதவியாளராக சரவணன் இருந்துள்ளார். அவர் தூண்டுதல் பெயரில் மோகன் உள்பட 6 பேர் ஈஸ்வரனை கடத்தி அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். அவர்கள் அனை வரும் தலை மறைவாகி விட்டனர். கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    இதற்கிடையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்த பிரைட் பாலு (45), சத்தியமங்கலம் செண்பகப் புதுரை சேர்ந்த சீனிவாசன் (45) ஆகிய 2 பேரையும் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடமிருந்து ரூ.4 லட்சம் மீட்கப்பட்டது.

    இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோவை தொண்டா முத்தூரை சேர்ந்த தர்மலிங்கம் (47), சத்திய மங்கலம் அருகே உள்ள உக்கிரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கர்ணன் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4.50 லட்சம் மீட்கப்பட்டது.

    கைது செய்யப்பட்ட தர்மலிங்கமும், கர்ணனும் அண்ணன் தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணன் மற்றும் மோகன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

    இவர்களை பிடிக்க போலீசார் தீரும் காட்டி வருகின்றனர். சரவணன் பிடிபட்டால் தான் எதற்காக கடத்தல் சம்பவம் நடைபெற்றது என உண்மையான நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×